வால்பாறையில் கனமழையால் பாதித்த பகுதிகளை நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையின் காரணமாக வால்பாறை அருகே உள்ள சக்தி, தலனார் , கவர்க்கல் எஸ்டேட் பகுதிகளில் சேதமடைந்த இடங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் சத்துணவு மையத்தின் மேல்கூரை மழை நீர் கசிந்து கொண்டு இருந்த பகுதிகளையும் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நேரில் ஆய்வு மேற்க் கொண்டார் அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காட்டு யானைகளால் இடித்து சேதப்படுத்தப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள் இரா.சே அன்பரசன், கனகமணி மற்றும் பலர் உடனிருந்தனர்