வால்பாறையில் காவல்துறை சார்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல வால்பாறை முடிஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை சந்தித்து அனைவரும் பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் எஸ் ஓ எஸ் செயலி, சாகோ செயலி மற்றும் 181, 1098 பற்றியும், சைபர் கிரைம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெண் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்..