செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிஜிட்டல் செஸ் பலகை தயார்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிஜிட்டல் செஸ் பலகை தயார்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், முதல்முறையாக, முழுதுமாக டிஜிட்டல் செஸ் பலகை பயன்படுத்தப்படுகிறது.

மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளின் 343 அணியினர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டு போட்டிகளில், சாதாரண செஸ் பலகைகள், டிஜிட்டல் செஸ் பலகைகள் என, இரண்டு வகைகளும் பயன்படுத்தப்பட்டன. மாமல்லபுரத்தில் நடத்தப்படும் போட்டியில், முதல்முறையாக அனைத்தும் டிஜிட்டல் பலகைகள் என, 700 பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, ஐரோப்பிய ஜெர்மன் நாட்டு டிஜிட்டல் பலகைகள், மாமல்லபுரத்தில் போட்டி நடக்கவுள்ள ‘ போர் பாயிண்ட்ஸ்’ விடுதிக்கு வரவழைக்கப்பட்டன. இவை கணினியுடன் இணைக்கப்படும். செஸ் வீரர்கள், காய் நகர்த்தும் நிகழ்வு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு இணையதளத்தில் பதிவாகும். பிறர், இணையத்தில், போட்டி நிகழ்வை காணலாம்.

இந்திய செஸ் கூட்டமைப்பினர், ஒவ்வொரு செஸ் பலகைக்கும், கணினி மூலம் பிரத்யேக வரிசை எண் தேர்வு செய்து, குறிப்பிட்ட நாட்டிற்கு, குறிப்பிட்ட வரிசை எண் அளித்து, பலகைகளில் அடையாளம் குறித்தனர். விரைவில் அனைத்து பலகைகளிலும், காய் நகர்த்தி பரிசோதிப்பதாகவும், 24ல் பரிசோதனை விளையாட்டு நடத்தப்பட உள்ளதாகவும், செஸ் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.