செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு ள்ளது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளிக்க உள்ளனர்.
இந்நிலையில் அந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இதில் பல்வேறு மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் அதற்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.
இந்த ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் துவங்கி அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைகிறது. அதன் பின் இந்த ஜோதியை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் வழங்க உள்ளனர்.
இந்த ஜோதி ஓட்டத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்கும் வகையில் பாரம்பரிய கலைகள், இசை முழக்கங்கள் முழங்க எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உட்பட கோவை மேயர் துணை மேயர் செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.