லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுடன் செல்ஃபி எடுத்த சென்னை மேயர் ப்ரியா…

சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரையும் மேயர் பிரியா தற்செயலாக சாமி சந்நிதியில் பார்த்தார். பின் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ப்ரியா, “இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக இங்கு வந்தேன். சாமி தரிசனம் நன்றாக இருந்தது” என்று தெரிவித்தார்.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சுமார் 1 மணி நேரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.