மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் சுமார் 266 மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார் .வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், வட்டாட்சியர் அருள் முருகன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஈ.கா.பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் 20 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான உமாமகேஸ்வரி சுதாகர், 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன்,9 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மகுடீஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகளும், நகர் மன்ற உறுப்பினர்களும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..