ஆடுகளை இளைஞர்கள் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

விவசாய தோட்டத்தில் இருந்து ஆடுகளை இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமார் 30 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் தனது தோட்டத்தில் உள்ள ஆடு பட்டியில் அடைத்து வைத்து விடுவார். நேற்று வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் திருடப்பட்டது தெரியவந்தது.

 

 

உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது இளைஞர் ஒருவர் ஆடுகளை திருடுவது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.