கால்நடைகள் அம்மை நோய் தாக்கி இறப்பு..? கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்காததால் நோய் பரவும் அபாயம்- உதகை விவசாயிகள் அச்சம்..?

நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பம்மந்து பகுதியில் சில நாட்களாகவே விவசாயிகளின் வளர்க்கும் மாடுகள் அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன,இதில் பல மாடுகள் இறந்தும் உள்ளது, பலமுறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் சீராக எடுக்காததால் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது, முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அம்மை நோய் பரவாமலும் மாடுகளும் இறக்காமல் இருந்திருக்கும் என்று விவசாயிகள் குமரல்.?
விவசாயிகள் பலமுறை கால்நடை மருத்துவர்களை அழைத்தும் நேரடியாக சென்றும் பார்க்கும் பொழுது டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர், இந்த நோய் வெகு சீக்கிரத்தில் பரவக்கூடிய நோய், நோயின் அறிகுறியை
விவசாயிகள் தெரிவித்தனர் மாடு தினந்தோறும் கறக்கக் கூடிய பாலின் தன்மை முதலில் குறையும், மாட்டின் காம்புகளில் கொப்புளங்கள் உண்டாகும், படிப்படியாக உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் பரவுகின்றன, இதனால் கால்நடை உணவு அருந்துவது குறைந்து விடுகிறது,தடிப்புகள் கொப்புளங்களாக மாறி பழுத்து சீழ் வடிவதால் கால்நடை முற்றிலும் சோர்வடைந்து கீழே விழுந்து இரண்டு நாட்களில்
இறந்து விடுகிறது, இதுபோன்ற அம்மை நோய் பரவி கோடப்பம் மந்து மைனலா போன்ற பகுதிகளில் தற்போது ஐந்து மாடுகளுக்கு மேல் இறந்துள்ளது, கால்நடை விவசாயிகள் நாங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பொழுது இந்த அம்மை நோய் பரவக்கூடிய தன்மை உள்ளது என்று கூறினார்கள், 1962 தொலைபேசியில் அழைத்த போது கால்நடை மருத்துவத்தில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மாடுகளை பரிசோதித்துப் பார்த்து இது அம்மை நோய் பரவக்கூடிய தன்மை உள்ளது என்று கூறி வேப்பிலை மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் பெயின் கில்லர் போன்ற மருந்துகளை கொடுத்து இதை மட்டும் கடைப்பிடிங்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்கள், இந்த அம்மை நோய்க்கு இதுவரை மருந்து இல்லாததன் காரணத்தினால் முன்கூட்டியே தடுப்பூசி போடப்படவில்லை, இந்த அம்மை நோய் நீலகிரியில் முதல் முறையில் பரவத் தொடங்கியுள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்,மாடுகளுக்கு வாய்ப்புண் நோய்கள் சில சமயங்களில் வருவதுண்டு, அதற்கான மருந்துகளும் தடுப்பூசிகளும் உள்ளன, இந்த நோய் கீழ் தேசங்களில் வருவது உண்டு, ஆனால் மலை பிரதேசமான நீலகிரியில் தற்போது எங்கள் தலைமுறையில் இதுவே முதல்முறை அம்மை நோய் பாதிக்கப்பட்டதை பார்த்திருக்கிறோம், இதற்கு முன் கூட்டியே தடுப்பூசி போடப்படக்கூடிய நடவடிக்கைகள் கால்நடை மருத்துவ துறை இதுவரையிலும் எடுக்கவில்லை இன்றைய விவசாயிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர், ஒரு கால்நடை மாட்டின் விலை ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் மேலாக உள்ளது, இந்த அம்மை நோயினால் மாடுகளை இழந்து உள்ளோம் உடனடியாக வேற மாடு வாங்க எங்களால் இயலாது தற்போது விலை உயர்வாக உள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளது,
இந்த அம்மை நோய் தொடர்ந்து நீடிக்கும் ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் மற்றும் பால் உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் குறையும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர், அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் மனு கொடுத்து தங்கள் கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடவடிக்கை செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்