கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள மன்றாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 82) விவசாயி. இவர் நேற்று குறும்பபாளையம்- அரசம்பாளையம் ரோட்டில் மொபட் ஓட்டிக் கொண்டு சென்றார் . அங்குள்ள அம்மாசியப்பன் தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள 6 அடி ஆழ சாக்கடைக் கால்வாயில் மொபட்டுடன் ...
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் ...
கோவை அருகே வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பல இடங்களில் நேற்று அமில மழை பெய்தது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொச்சி நகரத்தை ஒட்டி பிரம்மபுரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ...
கோவை அரசு மருத்துவமனை அருகே, டவுன்ஹால் செல்லும் வழியில் அரசு பேருந்து மீது இரும்புத் தூண் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, உக்கடம் டவுன்ஹால் பகுதியில் இருக்கக்கூடிய லங்கா கார்னர் பகுதியில் பாலத்திற்கு மேலே ரயில் செல்லக்கூடிய இரும்பு பாதை அமைந்துள்ளது. பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லக்கூடிய பாதையாகவும் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...
புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது. அதன் தொடர்ச்சியாக பணவீக்கம் தீவிரமடைந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. உலகளாவிய பொருளாதார தேக்க நிலையில் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் உட்பட அமைப்புகள் ...
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் ” ஸ்பா. அழகு நிலையம் உள்ளது.பூட்டி இருந்த அழகு நிலையத்திலிருந்து நள்ளிரவில் புகை வந்தது. இதை காவலாளிகள் ராமலிங்கம் ராஜகோபால் ஆகியோர் பார்த்து மேனேஜருக்கு தகவல் கொடுத்தனர்.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ...
திடீரென வேகமெடுத்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் – சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 3,000 பேர் பாதிப்பு ..!
நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16′ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு ...












