சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் புதிதாக வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ...

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே இடத்தில் வைத்து நல்லடக்கம் செய்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது. வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 385 பேர் பலியாகிவிட்டனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 300- ...

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் ...

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 504 செல்போன்கள் மீட்கப்பட்டது.இவைகளின் மொத்த மதிப்பு ரூ 94 ...

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1,50,000 கன அடிக்கும் மேலாக நீரானது காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ...

மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் ...

சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் ...

 மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று இரவு விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்த நிலையில், உபரிநீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை கடந்த ...

ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருந்த ஜோ பைடன் கடைசி நேரத்தில் விலகினார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸில் களமிறங்கிய நிலையில், அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் ...