தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், உறவினர்களை அடையாளம் காண புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனிடையே, ...

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகவும், பொருளாதாரத்தில் உலக நாடுகளை வழிநடத்தி வருவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு குறித்து பேசினார். புதின் பேசியதாவது, ‘இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு ...

கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ...

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விசிக கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபால் என்பவருக்கு நிரந்தர தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் அந்த வழக்கு ...

வாஷிங்டன் :உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ட்ரம்பிற்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனை கேட்ட ட்ரம்ப், பிரதமர் மோடி மற்றும் ...

பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. முடா என்பது மைசூர் நகர்ப்புற ...

புதுடெல்லி: நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன் 10வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இதே நாளில்தான் One Rank One Pension (OROP) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் ...

அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ம் ஆண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த ...

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த ...