இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்களை பெற்றதில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் கருவூலத்துக்கு வர வேண்டிய பணத்தை, அல் காதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளார். அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றார். ...

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஆனாலும் அவரது கட்சியை பற்றி மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலான தருணங்களில் பேசி வருகின்றன. கூட்டணிக்காக அச்சாரம் என்பது போல கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. இந் நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் ...

“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தின்கீழ் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற 2.0  ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1, 2024க்குப் பிறகு சொத்தை வாங்க, கட்ட அல்லது மறுவிற்பனை செய்ய நீங்கள் வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டுக் கடனில் 4 ...

ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தங்கள் எம்எல்ஏக்களை சட்டசபை கேமராக்களில் காண்பிக்கவில்லை என நேற்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ‘ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

இந்த வருடத்திற்கான பெருந்தலைவர் காமராசர் விருது கே.வி. தங்கபாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ...

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.1 லட்சம் சிகிச்சை கட்டணமாக இருந்த நிலையில், தற்போது அதை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ...

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று கூறினார். இந்த ...

பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். ‘ஸ்வாபிமான்’ திட்டத்தின் கீழ், புதுடில்லி அசோக் விஹாரில் குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பேச்சின் போது மோடி, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை ...

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பேசிய ‘யார் அந்த சார்?’ என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ராமநாதபுரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. ...

விழுப்புரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ...