அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள். அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து ...

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‘கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025’ என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட ...

மதுரை: தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அண்ணா பாதையில் இருந்து விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் ...

இன்று சென்னை மாநகரம் தனது 386-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,”எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் ...

பாட்னா: பயங்கரவாதிகள் எவ்வளவு ஆழமாக மறைந்திருந்தாலும், இந்திய ஏவுகணைகள் அவர்களை அழிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகாரின் கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கங்கை நதியின் மேல் ரூ.1,870 கோடியில் கட்டப்பட்ட 6 வழிச்சாலை மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். வடக்கு பிஹார்-தெற்கு பீகார் இடையே ...

நாட்டின் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார் அப்போது சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார் . தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியும், ...

அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்றுகூட தெரியாமல் சிலர் அறியாமையால் பேசுகிறார்கள். சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள், நாங்கள் அப்படியல்ல’ என்று த.வெ.க தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். மதுரை அருகே பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் ...

மதுரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் ...

மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை நீக்க முன்மொழிந்துள்ளது. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் மலிவாகி, மக்கள் எளிதில் காப்பீட்டைப் பெற முடியும். மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க முன்மொழிவை கொண்டு வந்துள்ளது. தற்போது 18% வரி காரணமாக, ...

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மதுரை திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடத்தில் நடைபெறுகிறது. பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலிமையான அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவும், தொண்டர்களை அணிதிரட்டவும் இந்த மாநாடு ...