பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எழுந்து, ‘துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பள்ளி பருவத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்’ என்று பேசினார். இதையடுத்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் எழுந்து, நான் ஆதி முதல் காங்கிரஸ்காரன். ஆனால் ...
நெல்லை: நெல்லை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வீட்டில் வைத்து தேநீர் விருந்து கொடுத்துள்ளார். அந்த தேநீர் விருந்தின் போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரிடமும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் ...
புதுடெல்லி: நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 30 முதல்வர்களில் 12 பேர், அதாவது 40 சதவீதம் பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கமான ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகபட்சமாக, ...
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் தனது திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் சமீபத்திய அறிக்கை, இந்த முக்கிய முடிவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு மாபெரும் செலவு மசோதாவில் ...
சென்னை: இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் – Likes – ல் கெத்து இல்லை Marks – ல் தான் கெத்து உள்ளது – மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ...
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிபர் டிரம்ப். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது அதிரடியாக வரியை உயர்த்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதன்காரணமாக இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் எழுந்துள்ளது. இந் நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க ...
அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள். அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து ...
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‘கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025’ என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட ...
மதுரை: தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அண்ணா பாதையில் இருந்து விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் ...
இன்று சென்னை மாநகரம் தனது 386-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,”எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் ...