தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. ...

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். 37 குடும்பங்களை மாம்மல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து விஜய் தனித்தனியாக ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொழில், சொந்த வீடு, கடன் ...

கோவை : துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு முதல் முறையாக நாளை ( செவ்வாய்க்கிழமை) வருகிறார் .அவருக்கு கோவை விமானத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவை கொடிசியாவில் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அவர் டவுன்ஹால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு எடுத்த முடிவுக்கு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் சிபிஎம், பாஜகவுடன் இரகசிய கூட்டு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பதிலளித்த கேரளக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் ...

சென்னை:வரவிருக்கும் 2025 நவம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சின்னம் கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான ...

நெல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. வடகிழக்கு ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக சுமார் 180 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ளார். 5 ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.இதற்குப் பின்னர் ...

தமிழகத்தில் சட்டசபை தேர்​தல் நெருங்கிவரும் நிலை​யில், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் ...

வாஷிங்டன்: ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார். ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் ...

சென்னை : செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) கையேற்கிறது. இந்நிலையில், சிபிஐ ...