விழுப்புரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், வேறு சில நபர்களும் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற ...

திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர். ...

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை​யில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் ஞானசேகரன் என்பவர் அத்து​மீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்து​விட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்​றுள்​ளார். அதை ...

கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு ...

புதுச்சேரியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார். ‘கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை ...

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர். ...

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமருமான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை நாட்டை வழிநடத்தி, முக்கியப் பணிகளைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். அவரது பதவிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ...

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தமிழ்நாடு 34.S.O.2143(E) DRAFT NOTIFICATION, ECO SENSITIVE ZONE அறிக்கையை தமிழக அரசின் முதன்மை வன அதிகாரி ராஜேஷ்குமார் வெளியிட்டு இருப்பதையும் புலிகள் காப்பகத்தின் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுபோல கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலையில் தனக்கு தானே ...