சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் ...

தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலம் 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட ...

நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் ...

நாட்டின் வடகிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 4121 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது 7545 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1,05,518 கோடி ...

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் ...

கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ...

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் இடைக்கால ...

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அன்று சிவகங்கையில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். மதுரை விமானநிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமி பயணித்த போது அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் ...

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை (இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ...