அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அன்று சிவகங்கையில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். மதுரை விமானநிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமி பயணித்த போது அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் ...

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை (இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ...

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இந்நிலையில், அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி ...

தாகா: இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் ஏற்றுமதிக்காக 130 கிமீ தொலைவுக்கு ரூ.28,300 கோடியில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேசம் நட்பு பைப்லைன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைப்லைன் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பதிபூரில் உள்ள தினாஜ்பூரின் மேக்னா பெட்ரோலிய கிடங்கு வரை அமைந்துள்ளது. இதனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ...

கிருஷ்ணகிரி: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய நலன் கருத்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாக அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிடுமா என்று இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் கேபி முனுசாமி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஒரு ...

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று ( சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை வந்தார் .கோவை விமான நிலையத்தில் அவருக்கு ‘அமைச்சர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் . வரவேற்பு ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு. க ...

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் ...

நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, தொழிற்சாலைகள் என பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன அந்த வகையில் கடலூரில் செயல்பட்டு வரும் என்.எல்.சி.நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு கடந்த சில வருடங்களுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டன. அவற்றை சீர்செய்யும் முயற்சியில் என்.எல்.சி தற்போது இறங்கியுள்ளது. இதற்கு சுற்று வட்டார கிராமப்புற மக்கள் ...

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மாற்றத்திற்கான ஒப்பந்தமாகும். இது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பாநீஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அமைப்பின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பெரும் அளவிலான ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் ...

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...