ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார். நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியனவும் வேட்பாளர்களை ...

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ? இதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதேனும் வெளியாக வாய்ப்பு இருக்கின்றதா ? என்பதெல்லாம் பட்ஜெட் ...

புவனேஸ்வர் : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அமைச்சர் நபா தாஸ், 140 கார்கள் வைத்திருந்த கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜ ஆதரவு அளித்தால் ஏற்று கொள்வோம். வராவிட்டாலும் சந்தோஷம் தான் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார். இதனால், பாஜவை கழற்றி விட எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ...

சென்னை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காந்தியடிகள் சிலைக்கு ...

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 நாளை முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 13 -ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது ...

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதயாத்திரை இன்று மாலை 4 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறது. பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் ...

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்றைய தினம் முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாலர் ...

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...