கோவை : பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை வெரைட்டி ஹால் சி.எம்.சி. காலனி பகுதியில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்கு ...
சென்னை: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். ...
கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் தனது சேவையை தொடங்கியது. அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ...
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் ...
டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்ய உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் ...
ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு ...
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ...
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரை முருகன் இசை மதிவாணன் முருகன் ஆகிய மூன்று பேரிடம் 10 மணி நேரம் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் சாட்சிகளாக மட்டுமே தங்களிடம் என் ஐ.ஏ விசாரணை நடைபெற்றதாகவும், சம்மன் அளித்தால் மட்டும் சீமான் ஆஜரானால் போதும் என அதிகாரிகள் கூறியதாகவும் சாட்டை முருகன் ...
திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நட்சத்திர வேட்பாளரான திருநாவுக்கரசர் அதற்கு தகுந்தாற்போல் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட நேரடியாக செல்லவில்லை என தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் இந்நிலையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் ...
சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு தொடர்பாக கூறியிருப்பதாவது: அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே ...













