சென்னை: முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் தொடங்கி வைக்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான விவரம் ...

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய்  பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு ...

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், பொதுக்களின் வசாதகிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கென உணவு வசதிகளும் சிறப்பான முரையில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ...

ஜொஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வந்தே மாதரம் என முழக்கமிட்டு இந்தியர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரானா பரவலுக்கு பிறகு நேரில் நடைபெறும் ...

‘உற்பத்தித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்’ என பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2023 அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி ...

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி; திருப்பத்தூர் ...

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுபினார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் ...

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், கடந்த 24-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் விண்ணப்பதிவு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், ...

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை ...

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ...