புதுடெல்லி: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி ...
பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும்கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், ...
புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும். நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ...
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. இம்மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதுவும் காங்கிரஸ்- ...
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யமுடியாது என ஜகதீப் தன்கர், மற்றொரு எம்பியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருக்கை வரை சென்று விவாதித்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ...
சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தக் கோரி ...
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை பிரபலப்படுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இந்தப் ...
நாடாளுமன்றத்தில் நடந்த அவையில், தெலுங்கானா எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பின்வரும் விஷயங்களை கூறியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கி உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பை வெளியிட்ட ...
மக்களின் பார்வையில் அதிமுகதான் எதிர்க்கட்சியாக உள்ளது என சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதே எனது வேலை என வி.கே.சசிகலா நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வி.கே.சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து அதில் தன்னால் தலையிட முடியாது ...
மதுபானங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது பேசிய அமைச்சர், “அத்திக்கடவு ...












