பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. ...

திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த ...

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு மாவட்ட அவை தலைவர் மாநகர பிரின்ஸ் தங்கவேல் மாரடைப்பால் கடந்த வாரம் மரணம் அடைந்தார் இவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முசிறியில் உள்ள பிரின்ஸ் தங்கவேல் இல்லத்தில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅமைந்துள்ள தூரி பாலம்பகுதியில் இன்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் பழங்குடியினரும் கிராம மக்களும் அவசர கால தேவைக்கான ...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் கேப்பை தலைநகர்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் சுஷாந்த் கௌரவ். நக்ஸல் அட்டூழியங்களாலும் வறுமையின் கொடுமையினாலும் ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டம் வறுமைக்கோட்டின் மிகக் கீழே இருந்தது. வளமான நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை. ஒருபுறம் விளைந்த பயிர்களை ...

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.30) அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பிரதமரின் வருகையையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகா் முழுவதும் மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்கவா் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் அலங்கார ...

புதுடெல்லி: அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்ஃபா தீவிரவாத அமைப்பு நேற்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டு வந்தது.இதையடுத்து மத்திய அரசால் 1990-ல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான உல்ஃபாபிரிவுக்கும் அரசுக்கும் இடையே கடந்த ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், ...

வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக உளவுத்துறை அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் ...

சென்னை: இந்த ஆண்டு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கலை அறிவியல் ...