கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பணியிடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்முறைகள் நாளும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதனால், சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது ...

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய ...

தமுமுக 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வார்டு தலைவர் கபீர் அஹமது தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தமுமுக முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில பொருளாளர் சபியுல்லாகான் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் அனைவரையும் வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் ...

திருச்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் . அதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ...

திருச்சி மெட்ரோ திட்டத்திற்கு ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் ரூ.11,000 கோடி செலவாகும் என்று சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்த மாபெரும் சிந்தனையற்ற திட்டத்தை நாம் ...

திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகள் கட்டாயமாக சேர வேண்டும் என்று தமிழக அரசு நெருக்கடி தரவில்லை மேலும் விருப்பம் உள்ள ஊராட்சிகள் சேர்ந்தால் சேரலாம் சேராவிட்டாலும் அது பற்றி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து ...

சூலூர் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் சூலூர் எஸ். ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர் கூட்டத்தில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான ...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது தி.மு.க.அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மை என்று சாடியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ...

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 724 கிமீ தூரத்தை 9 மணி நேரத்திற்குள் கடக்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். இன்டர்சிட்டி ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். இறுதிப் பயணத்திற்கு, நாற்காலி கார் வகுப்பு டிக்கெட்டின் கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.1,700 வரை ...

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ...