சேலம் ஓமலூரில் இன்று (ஜனவரி 29, 2026) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ...

தேனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது தற்போதைய அரசியல் நிலை குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். “எங்களைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாகத் தெரியவில்லையா?” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை ஒன்றிணைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை எந்தவொரு ...

டெல்லி: உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தனது உரையை துவங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கமிட்டனர். 100 நாள் ...

உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று (ஜனவரி 29) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சமீபத்தில் கையெழுத்தான ...

ஊழல், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனவரி 2025-ல் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து மீண்டும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு (CRVO) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு ...

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறவுள்ளது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக ...

டெல்லி: மத்திய பட்ஜெட் வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கிடையே ரூ.17 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லாத வகையில் புதிய ஒரு அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ...

மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கள்கிழமை(ஜன.26) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மாற்றாக யுஎஸ்டிபி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது. யுஎஸ்டி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ...

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, ...