காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேலின் ஜஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கில் போர் மிகுந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ...

உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். அந்த மேடையில் திருமாவளவன் பேசியது: 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, ...

ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் இன்று (அக்.1) நடைபெறுகிறது. தேர்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், ...

சென்னை: புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி ...

திருச்சி மாவட்டம் பழூர் காந்திநகரைச் சேர்ந்த திராவிடமணி காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருச்சி மாநகர், ஜீயபுரம் தனிப்படை காவல்துறையினர் கடந்த 26-ம் தேதி திராவிட மணியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து சென்று 27-ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் ...

நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று கொடியை அறிமுகம் செய்திருந்தார். அந்தக் ...

மதுரையில் வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்துவரும் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். ஆசிரியை சுபஸ்ரீ மதுரை வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்து வருகிறார். அவருடைய மூலிகைப் பூங்காவைப் பார்வையிட நாள்தோறும் பார்வையாளர்கள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர ...

தமிழ்நாட்டின் மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றுதலுக்கு நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று ஆளுநர் மாளிக்கையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு வருகின்றனர்.இதில், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் ...

டெல்லி: பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிடட இரண்டு விஷயங்கள் தொடர்பாக ...

டெல்லி: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று வந்த இந்திய அணி வீரர் , வீராங்கனை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். அவர்களை செஸ் காயின்களை நகர்த்த வைத்து மகிழ்ந்த அவர், வீரர்களுடன் கைகுழுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் ...