இது வரையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர 2.43 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., ...

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் ...

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு ...

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் சத்திரிய இந்து நாடார் பள்ளிகள் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவர் பழனி குமார், செயலாளர் எம்.பெத்துராஜூ, பொருளாளர் ஏ. ஜெகதீஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சத்திரிய இந்து நாடார் உறவின்முறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறவின் முறைக்கு ...

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் ...

2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்விசார் செயல்பாடுகள், கல்விசாராச் செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் செயல்பட அனைத்துக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ...

டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்துள்ளன. வியக்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களை அனுமதிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ...

எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின்  அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  ...

தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ ...