சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றிக் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் ராஜ் (58). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ...
சேலத்தில் அசல் நோட்டைப் போலவே இருக்கும் போலி 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.இப் போலி நோட்டுகளில் வரிசை எண்கள் ஏதுமின்றி, “FULL OF FUN” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.அசல் நோட்டின் நிறம் மற்றும் தோற்றத்தில் இருப்பதால், பொதுமக்களும் வியாபாரிகளும் கவனக்குறைவால் ஏமாற அதிக வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பணப் பரிவர்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்குமாறும், இத்தகைய ...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்துள்ள தடையை மீறும் முயற்சிகள் மீதான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட 362 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உலர்ந்த பேரீச்சம்பழங்களைப் பறிமுதல் செய்துள்ளது.உளவுத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட டிஆர்ஐ அதிகாரிகள், நாசிக்கில் சோதனையிட்டனர். அப்போது மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் ...
11 பேரை பலி கொண்ட டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு பயங்கரவாதி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய ...
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். பள்ளி படிப்பை முடித்த இவர், லேபர் வேலைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தொடர்புடையவர்களின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து எப்க்யூஎல் எக்சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை, ...
பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் ...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது. ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகுதியில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தங்குமிடமும், அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வந்துள்ளார். லஷ்கர்-இ -தொய்பா ...
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (, தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது.அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை ...
கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் பாதுகாப்பு அமைப்புகளை கடும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறை மின்னஞ்சல் வந்தபோதும் விமானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, வெடிகுண்டு நிபுணர் ...













