கோவை சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் உரிமம் பெறாமல்பட்டாசுகள் விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான பட்டாசுகள் விற்பனைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பெரியசாமி ...

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா ...

சென்னை: சமீப காலமாக அமலாக்க துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் அவர்கள் தமிழகத்தில் எந்த இடங்களிலோ கஞ்சா மற்றும் குட்கா மற்றும் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் அடியோடு இருக்கக் கூடாது என்ற உத்தரவின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது பிளாட்பாமில் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா ரயில் வந்தடைந்தது. ...

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் “மெத்தோபட்டமைன் ” என்ற உயர் ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் ரேவதி ( வயது 29 )இவர் நேற்று செட்டி வீதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...

கோவை கடைவீதி பக்கம் உள்ள கே.சி. தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குடட்கர், தீ ராஜ்,சியாம் ஆகியோர் 28- 12 – 22 முதல் 30, 6 -23 வரை 1099.995 கிராம் எடை ...

தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 27) இவரும் அதே பகுதியில் ...

கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் தங்கி உள்ளனர் .கடந்த 20ஆம் தேதி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெளியே சென்று விட்டு இரவில் தாமதமாக விடுதிக்கு வந்துள்ளார் . இது பற்றி மூத்த மாணவர்கள் 2 பேர் ...

கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் புதிய -பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற ...