ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றதையடுத்து, தலைநகர்பெங்களூருவில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ...

 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பட்டம், பொதுக்கூட்டம் நடத்தியும் அரசுக்கு வலியுறுத்தின. நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் ...

சென்னை: தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் ...

சென்னை: ‘கீழடி அகழாய்வு விவகாரத்தில், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக ...

மாஸ்கோ: புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்..அங்கே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செர்னோபில் போன்ற ...

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீ நுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி ...

பெய்ஜிங்: இப்போது சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் இருக்கிறது. வர்த்தகத்திற்கு டாலரின் பங்கு முக்கியமானதாக இருப்பதே இதற்குக் காரணம்.இதற்கிடையே டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவது போலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சீன மத்திய வங்கி ஆளுநரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக வர்த்தகத்தில் டாலருக்கு ...

கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் ...

கோவை ஜூன் 20 கோவை மாவட்டம் காரமடை, நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40) அங்குள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காயத்ரி ( வயது 20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர் காதல் திருமணம் செய்தது காயத்ரியின் ...

கோவை ஜூன் 20 தேனி மாவட்டம் .போடிநாயக்கனூர்,பக்கம் உள்ள பி. நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ரிதிகா ( வயது 19 )கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. ...