சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான நீண்டகால உட்கட்சி மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்சியின் போக்கு தெளிவாக இல்லாத நிலையில், சமீபத்தில் அதிமுக தலையிட்ட பிறகு சில அரசியல் மாற்றங்கள் இருவரையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் ...
காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் ...
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே ...
சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட ...
கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு, தவெக நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் , நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட தவெக செயலாளர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் சம்பவத்திற்குப் ...
காஷ்மீர்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அரசு ஒரு சூனியக்காரி போல அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் பாகிஸ்தான் அரசின் கைகள் ரத்தத்தால் நனைந்துள்ளதாகவும் போராட்டத்தை நடத்தும் நவாஸ் மிர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் தங்களை ஒடுக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தங்கள் போராட்டங்கள் கடைசி வரை தொடரும் ...
கோவை : ஆயுதபூஜையை யொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:- பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தேவை காரணமாக பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை கிலோ ரு 1200 முல்லை கிலோ ரு 800 செவ்வந்தி ரூ 200, ரோஜா ரூ ...
குடிநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், கடந்த வாரம் காவல்துறை பெண் ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவை நகரம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், நாள்தோறும் சாலை விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கோவை முழுவதும் உள்ள சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை ...
கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, மருதபுரம், நஞ்சப்பர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 55 )கணவர் செல்வராஜ் அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணி தினமும் உணவு எடுத்துச் சென்று கொடுத்து வருவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி ...