மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வின்போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகேயுள்ள இங்கோரியா பகுதியில், பக்தர்கள் துர்கா சிலையை டிராக்டரில் ஏற்றி சம்பல் ஆற்றை நோக்கிச் சென்றனர். அப்போது, 12 வயது சிறுவன் தவறுதலாக டிராக்டரை இயக்கியதால், அது பாலத்தின் ...
இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் வரும் அக்டோபர் 26ம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது விமான சேவை குறித்தும் பேச்சுவார்த்தை ...
மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி ...
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து சென்னை சென்றுவிட்ட நிலையில், ...
மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு இனி அனுமதிக்கக் கூடாது என கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 7 வழக்குகள் விசாரணையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் “அனுமதி அளிக்கப்பட்ட இடம் மாநில சாலையா? தேசிய நெடுஞ்சாலையா?, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலனே முக்கியம், விஜய் பரப்புரை கூட்டத்தில் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ஹெச்-1பி மற்றும் எல்-1 பணி விசா விதிகளை கடுமையாக்கியுள்ளார். குறிப்பாக, ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் $2,000-$5,000 என்ற அளவிலிருந்து $100,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது, அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஹெச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை அதிகம் நம்பி வெளிநாட்டு திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு ...
டெல்லி: ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி, அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்தப் பயணத்தை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் தாலிபான் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் டெல்லிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இந்தியா-தாலிபான் உறவில் இது ...
டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட கிட்டத்தட்ட 63 சதவீதமும் 103 சதவீதமும் அதிகமாகும். Reliance Industries ...
சென்னை: சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் லஞ்சம் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் பிஸ்னஸ் செய்யவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.. இதனால் இந்தியாவில் தங்கள் ஆபரேஷன்களை நிறுத்திக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான வின்ட்ராக் இன்க் என்ற நிறுவனம் அக்டோபர் 1ம் ...
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாடு ...