கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்னசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜிதார் முகமது (வயது 61 )இவரை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜிதார் முகமது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று உடல்நிலை ...
கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . ...
தொழில் நகரமான கோவையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் பொங்கல் பண்டிகையையொட்டி அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இதனால் கோவையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ...
கோவை சவுரிபாளையம் ,மீனா எஸ்டேட் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46 )இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பி.ஏன்.பாளையம்,ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் . ...
பொங்கல் பண்டிகையையொட்டி கோவை பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பண்டிகை காலங்களில் ரயில் பஸ்களில் முன்பதிவு விரைவாக முடிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மது கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ,தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ...
பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முத்தமிழ் செல்வி மதுரைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மதுரையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா லாரன்ஸ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விமலா லாரன்ஸ் அவர்களுக்கு சக காவல்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.. ...
ஜனவரி 13-ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பொங்கல் விழா நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றனர். பண்டிகை ...













