இன்று தேனியில் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையைத் தன் திரைப்படங்கள் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சென்ற புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், 84-வது வயதில் உயிரிழந்தார். ...
ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் ...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிவிட்டது. இன்று 70 படைகள் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இந்த படைகள் பணிகளை தொடங்கி உள்ளன சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் இருக்கின்றன. ஆவடி, தாம்பரத்தில் நான்கு படைகள் இருக்கின்றன. இந்த படைகளின் எண்ணிக்கை ...
புதிய ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுள்ளனர். பொது சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை காரணம் காட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக பாகிஸ்தான் ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த ...
மத்திய அரசின் ஆழ்கடல் ஆய்வு திட்டமான சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் அந்தமான் கடற்பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிவாயு கிணற்றில் இருந்து 30 முதல் 40 ஆண்டுகள் வரை தடையின்றி தொடர்ந்து எரிபொருளை எடுக்க முடியும் என ...
இந்தியா தனது அணு ஆயுத இருப்பை பாகிஸ்தானை விட அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது.. ஜனவரி 2026 நிலவரப்படி இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் (warheads) உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானிடம் தொடர்ந்து சுமார் 170 அணு ஆயுதங்களே உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், பல தசாப்தங்களாக நிலவி வந்ததாகக் கூறப்படும் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமைச் சுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வரும் ‘அண்ணா நகர்’ பகுதிக்குள், தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துப் பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் தங்கு தடையின்றி இயக்கப்பட்டுச் ...
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு வல்லுநர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.அதாவது அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசாக்களுக்கு விதித்திருந்த 1,00,000 டாலர் (சுமார் 83 லட்சம் ரூபாய்) என்ற பிரம்மாண்டமான கட்டண உயர்வை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், ஐடி ஊழியர்களுக்குப் பெரும் ...












