கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது..இந்த கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் தலைமையில் நேற்று நடந்தது. கவுன்சிலரும்,நகர அமைப்பு குழு தலைவருமான சந்தோஷ் என்ற சோமுஇந்தப் பணியை தொடங்கி வைத்தார். இதில் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் உள்பட45 பேர் ஈடுபட்டனர். ...
கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் நாகராஜன் (வயது 34) அவிநாசி, ...
கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் கிருஷ்ணன் இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 20 )இவர் பரத் என்பவரை காதலித்து வந்தாராம். .இந்த நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.காதலன் பரத்துடன் எங்கோ மாயமாகி இருப்பதாக தெரிகிறது .து ...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் சின்ன கலைய முத்தூர் , என். டி.நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் ( வயது 40)இவர் கணபதி உடையாம்பாளையம் விவேகானந்தா ரோட்டில் உள்ள தனசேகர் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வந்தார்..இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து பக்கத்து வீட்டில் ...
கோவை ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் . (வயது 57 )இவர் நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் ரங்கராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ...
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் வயிறு பிரச்சனைக்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
கோவை ஒண்டிபுதூர், மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் ( வயது 75 )இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சை கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சிங்காநல்லூரில் இருந்து காமராஜர் ரோடு வழியாக பீளமேடு ஹோப்காலேஜ் அருகே வரும்போது சாலையில் ...
கோவை : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்காலில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டது .அந்த ரயில் கடந்த 22- ‘ஆம் தேதி அதிகாலை 12 -45 மணிக்கு கோவை அருகே வந்து கொண்டிருந்தது. இருகூரிலிருந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்த ...
வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். ...
கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலையை தலைமை இடமாக கொண்டு சுகுணா புட்ஸ் ( உணவு) நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா ...