தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். கடந்த ஆண்டு மொரீஷியஸில் தொடங்கப்பட்ட யுபிஐ மற்றும் ரூபே கார்டு சேவைகளுக்கு பிறகு, இப்போது உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்க ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத் தங்கள் தொடங்கி வைக்க முத்தவல்லி என்.கே.கமாலுதீன், முத்தனூர் தங்கள் செய்யிது சிகாபுதீன், கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுப்ஹ் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ரேஷன் கடையின் ஜன்னல்களை உடைத்து சூறையாடியது. பின்னர் ரேஷன் கடைக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த அரிசி ,பருப்பு மூட்டைகளை தின்றது ,தொடர்ந்து அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த யானை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது .அதில் இறங்கிய பயணிகளை விமான நிலைய ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு “இமெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இது தொடர்பாக கோவை மாநகர ...

கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று துடியலூர், ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்குதடை செய்யப்பட்ட சாணி பவுடர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ஜெய்னாதீன் (வயது 50) ...

வேலூர் மாவட்டம திருப்பத்தூர் சி. கே. சி .நகரை சேர்ந்தவர்விஜய். இவரது மகன் லெனின் ( வயது 34) இவர் கோவை துடியலூர், ஜி. என். மில், திருவள்ளூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் வாடைக்கு குடியிருந்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் ...

கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் ...

கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் ...