ஜாக்டோ-ஜியோ’ என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கு அமைப்பாகும். இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே, ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்புக்கு எதிராக அந்த ...
இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான ...
சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று ஆகும். பழங்களை உண்ணும் வவ்வால்கள், குதிரைகள், நாய்கள் ...
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் ...
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல் ( வயது 33 ) இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள மத்திய ஆயுதப்படை (சி. ஆர். பி.எப்) பயிற்சி முகாமில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ...
தேனிமாவட்டம், ஊஞ்சம்பட்டி, ரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் ...
தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில், வியாபாரம் செய்வதற்காகவும், பணிக்காகவும், படிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வருகின்றனர். அவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ( திங்கள்கிழமை) பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது .நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மருதமலை முருகன் கோவில் அடிவார பகுதியில் புகுந்தது. ...
கோவை மாவட்டம் காரமடை அருகே கோட தாசனூரை சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 60) இவரது தோட்டத்திற்குஅந்தப் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 7 பூப்பறிக்க சென்றனர். இதை யடுத்து ரங்கராஜ் மற்றும் தொழிலாளர்கள் பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேனீக்கள் அவர்களை கொட்டியது .இதில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு ...
பொதுமக்கள் வாங்கும் வீடு மற்றும் மனை உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது அவசியம். இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. விஷேச நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு, யாரும் ...













