நீலகிரியில் போக்குவரத்து விதி மீறியதாக 2 லட்சம் பேர் மீது வழக்கு..!

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது
இதே தவறை மீண்டும் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகிறோம். அபராத தொகை அதிகரிக்கப்பட்டதால் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் 2,32,248 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.3,12,08,875 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1,96,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.