கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply