கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு 

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு 

கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜமேஷா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது ஜமாத்துகள் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடைக்க செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் ட்விட் செய்திருக்கின்றார். இது பதட்டமில்லாத பகுதியில் ட்விட் குண்டை வீசிவதாக அமைந்திருக்கின்றன. இதனால் இந்து முஸ்லீம் இடையே சச்சரவு ஏற்பட வாய்பிருக்கின்றன. இதனை அறிந்த சிட்டி சைபர் கிரைம் போலீஸார் கிஷோர் கே சாமி மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.153 IPC – கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கிஷோர் கே சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நீதிபதி சரவணா பிரபு முன்பாக சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஆஜர் படுத்தி இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க கோரி மறு தாக்கல் இருக்கின்றனர்.