கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,பி..அன்ட். டி காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48) துணி வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி ரேணுகாதேவி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply