கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார்.
பாலியல் தொல்லை.
சம்பவத்தன்று சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நாகராஜ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதனையடுத்து நாகராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இரவு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம் சிறுமி தனது கால், வயிறு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரிடம் பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம் நாகராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Leave a Reply