கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை அன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்தார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவருடைய அண்ணன் தனது உடன்பிறந்த தங்கை என்று கூட பார்க்காமல் அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு அவர் அனுமதிக்காததால் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகும் மிரட்டி துன்புறுத்தினாராம். உடனே அந்த மாணவி அவரை எதிர்த்து தாக்க முயன்ற போது தனது கையில் இருந்த பிளேடை எடுத்துக் கொண்டு தன்னை தாக்கினால் பிளேடை எடுத்து தனது கையில் வெட்டிக்கொள்வேன் என்று மிரட்டினாராம். இது அவருடைய வயிற்றில் பட்டு ரத்தம் வெளியேறியது உடனே அந்த மாணவி இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து வயிற்றில் காயம் ஏற்பட்ட அந்த மாணவியின் அண்ணனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தனது அண்ணனே தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெற்றோருடன் கூறி கதறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் போலீசில் புகார் செய்தனர் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியின் அண்ணனை கைது செய்தனர். உடன் பிறந்த அண்ணனே தங்கை என்று கூட பார்க்காமல் மிருக தனமாக பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சொந்த தங்கையையே பலாத்காரம் செய்த கொடூர அண்ணன் கைது..!







