கோவையில் பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில்குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் பிரேம்குமார் ,ஸ்டீபன் ஆகியோர் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்காக வெள்ளக்கிணறு பகுதியில் குடோன் வைத்துள்ளனர் .இந்த நிலையில் பிரேம்குமார் கடந்த 26 -ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன்காளையார் கோவிலுக்கு சென்றார். 2நாட்கள் கழித்து கோவை வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோஉடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 700 பணம் |மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. ‘யாரோ திருடி சென்று விட்டனர். இவைளின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்..இது குறித்து சரவணம்பட்டி போலீசில் ஆரோக்கியசாமி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்..கொள்ளையனை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தபட்டு வந்தது. இந்த வழக்கில் தனிப்படைபோலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வாகனங்கள் எண்களை வைத்து விசாரணையை நடத்தினர். அப்போது ஆரோக்கியசாமியின் உறவினரான சித்தாபுதுரை சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் மரியா அமுதம் ( வயது 37 )என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது .இதை தொடர்ந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மரியமுதம் போலீசில் கொடுத்து வாக்குமூலத்தில் சொந்தமாக தொழில் வந்ததாகவும் பங்கு சந்தையில் அதிக பணத்தை இழந்ததாகவும், அதை ஈடுசெய்ய இந்த கொள்ளையை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.கொள்ளையரை பிடித்து நகையை மீட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..!









