தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாய் கடிப்பது மட்டுமின்றி அந்த நாயால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைப் ...
வெற்றிகரமாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஆக்ஸியம் – 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறார். அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் ...
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.இதனிடையே நேற்று கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் திருமகூடலு சங்கமத்தில் ...
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் இன்று (ஜூன் 250 அதிகாலை நேரத்தில் ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.பதவி பறிபோன முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் இக்கொலையை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (30). பனியன் தொழில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்ட்டர் பரிந்துரை செய்தார்.ஈரான்-இஸ்ரேல் போரை அவர் புத்திசாலித்தனமாக நிறுத்தியதால் இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கார்ட்டர் தனது பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற ஒரு பரிந்துரையை உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் ...
தொடர் கனமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அப்பகுதி மக்களுக்கு ஒரு வித மரண பீதி தான். இந்நிலையில் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து ஒரு வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு ...
முதலமைச்சசர் ஸ்டாலின் வேலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க ரயில் மூலம் வேலூருக்கு சென்றார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் ...
புதுடெல்லி:சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது.இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ...
சென்னை:’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ...
விழுப்புரம்:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக ...













