90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றில், சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்து நொறுங்கியது. தெற்கு பிரேசில் குவாய்ப்பா நகரில், தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில், 24 மீட்டர் உயரம் உள்ள சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. புயல் காரணமாக அந்நகரில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ...

சேலம் ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர்..ஏதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலையில் காணப்படும் சாலைகள்..வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது… ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் ...

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாகச் செல்ல உள்ளது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லக்கூடிய தொப்பூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி to சேலம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை ...

நன்னையம் செய் அறக்கட்டளையின் சார்பில்  கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மெல்மருந்தங்கரை மற்றும் கீழ்மருந்தங்கரை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியை நன்னையம் செய் அறக்கட்டளை தலைவர் அருண் கார்த்திக், செயலாளர் கணேஷ் மற்றும் பொருளாளர் ...

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதால் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை ...

திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...

நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் அதிக அளவில் செல்போன் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் செல்போன்களின் உதிரி பாகங்கள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நெல்லை அறிவுசார் சொத்துரிமை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை அறிவுசார் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் ...

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில், 13 இன்ஜினியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.எந்திரங்களை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் அவற்றை இன்ஜினியர்கள் சரி செய்வார்கள் என்றும் பழுது உள்ள   இயந்திரங்கள்   மாற்றப்படும்.என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.    தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி ...

கோவையில் தி.மு.க வினர் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் (தி.மு.க, பா.ஜ.க போன்றவை) இடையே தொடர்ந்து சர்ச்சை போஸ்டர் மோதல்கள் நடந்து வந்தது, இதனால் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று பதற்றமான ...