காஷ்மீர்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அரசு ஒரு சூனியக்காரி போல அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் பாகிஸ்தான் அரசின் கைகள் ரத்தத்தால் நனைந்துள்ளதாகவும் போராட்டத்தை நடத்தும் நவாஸ் மிர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் தங்களை ஒடுக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தங்கள் போராட்டங்கள் கடைசி வரை தொடரும் ...

கோவை : ஆயுதபூஜையை யொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:- பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தேவை காரணமாக பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை கிலோ ரு 1200 முல்லை கிலோ ரு 800 செவ்வந்தி ரூ 200, ரோஜா ரூ ...

குடிநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், கடந்த வாரம் காவல்துறை பெண் ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவை நகரம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், நாள்தோறும் சாலை விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கோவை முழுவதும் உள்ள சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை ...

கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, மருதபுரம், நஞ்சப்பர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 55 )கணவர் செல்வராஜ் அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணி தினமும் உணவு எடுத்துச் சென்று கொடுத்து வருவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று குளத்துப்பாளையம், நேதாஜி நகர், செங்குளம் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா, 70 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் ...

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு,சேரன் மாநகரை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி மல்லிகா ( வயது 63) இவர் கடந்த 26, ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று அவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்து மல்லிகாவுக்கு தகவல் ...

கோவை சேரன்மாநகர், 4- வது பஸ் ஸ்டாப் பகுதியில் வசிப்பவர் ஜெயபால் ( வயது 47) பில்டிங் கட்டுமான தொழில் செய்து வந்தார்.. குடிப்பழக்கம் உடையவர் .நேற்று முன் தினம் இவரது மனைவி வேலன்டீனா தனது மகனுடன் மதுரைக்கு சென்று இருந்தார். அப்போது ஜெயபால் செல்போன் வீடியோ காலில் தனது மகனுக்கு போன் செய்து தான் ...

கோவை திருச்சி ரோட்டில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு 27-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆராதனைகூட்டம் நடந்தது இதனை தொடர்ந்து நேற்று ...

கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம்,ஜூடிசியல் அகாடமி, பாஸ்போர்ட் அலுவலகம், டைட்டல் பார்க்ஆகியவற்றுக்கு இமெயில் மூலம் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது .போலீஸ் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக ” இமெயில் “மூலம் நேற்று மிரட்டல் வந்தது, அதில் கோவை ...