புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் “நமது குடியரசின் மதிப்புகள்” மீதான நேரடித் தாக்குதல். இந்த கோழைத்தனமான செயலுக்கு பின்னால் பாகிஸ்தானின் சூழ்ச்சி உள்ளது. நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான ...

ஊட்டியில் ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ள நிலையில் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகை சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ...

 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு துணிச்சலான ராஜதந்திர, முக்கிய நடவடிக்கையாக, வரலாற்றில் முதல் முறையாக 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இரத்தமும், தண்ணீரும் இனி ஒன்றாகப் பாய முடியாது. உலக வங்கியின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த ...

கோவை ஏப்25கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 19- ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. எரிசாயமும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ...

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ...

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு பரபரப்பான சூழலில் இன்று (ஏப்ரல் 25) காலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடங்க இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் ...

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தளபதி ஜெனரல் உபயேந்திர திவிவேதி விரைவில் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத் தளபதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ள மூத்த ராணுவ கமாண்டர்களை சந்திப்பார். மற்ற ...

தமிழகத்தில் திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் அமைச்சரவை 5 முறை மாற்றங்களை சந்தித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான சர்ச்சைகள் மற்றும் முதலமைச்சரின் அதிருப்தி காரணமாக அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் திமுக கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. 4 வருடங்களை முடிவடைந்து 5ஆம் ...