உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ...

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் ...

சென்னை தண்டையார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஹிஜாவு விக்டிம் நல சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைவராக பாண்டிச்சேரி கருணாகரன், ...

கோவை :  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் போபிரா ராய் (வயது 42) இவர் தனது தந்தை ராகுல் ராயுடன் சூலூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இந்த நிலையில் 2 பேரும் நீலாம்பூரில் உள்ள தனியார் பாருக்கு கடந்த 31ஆம் தேதி மது அருந்த சென்றனர்.தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்திவிட்டு பாரில் ...

கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபடுகிறது. பின்னர் அவர் கோவை விளாங்குறிச்சி ஐ.டி. வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை ...

கோவை தொண்டாமுத்தூர் ரோடு, பாரதி நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் 43 வயது ,51 வயது பெண்கள். இவர்கள் கோயம்புத்தூர் “சைக்கிளிங் கிளப் ” உறுப்பினர்களாக உள்ளனர். 2 பேர் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சைக்கிளிங் பயிற்சி செய்த போது அவர்களை மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்தார். திடீரென்று அவர்களை ...

கோவை, துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம் நேற்று குனியமுத்தூர், பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா )மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் பாரதி நகர் சேர்ந்த இஸ்மாயில் ( வயது 61) ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், லூனா நகர், லிபர்டி கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் காதல வைத்திருந்தாராம். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. ...

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40 ) இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெகமம் பக்கமுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தார். வந்து ...