டெஹ்ரான்: ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் ...
மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நேற்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற ...
மாஸ்கோ: இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வரும் எனச் சொல்லப்பட்டது.குறிப்பாக ரஷ்யா இதில் களமிறங்கும் என்றே பலரும் கருதினர். ஆனால், ரஷ்யா இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அமைதி காத்தே வருகிறது. இதற்கிடையே ரஷ்யா இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து அந்நாட்டின் அதிபர் புதின் முக்கிய ...
மதுரை: நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார்.மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான ...
உதகை ஜூன் 23 நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் நீலகிரி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளின் விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடைபெற்ற விவசாயிகள் ...
சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, வரும் ஜூலை 1ஆம் தேதி, ரஷ்யாவின் கலினின்கிராட்டில் அந்நாட்டிடம் இருந்து பெற்று, இந்திய கடற்படை தன்னிடம் இணைக்க உள்ளது.இந்த விழாவில் மேற்கு கடற்படை தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.”தமல்” என்று ...
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்நாளை நீட்டிப்பதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வக விலங்குகள் (எலி) குறைவாக உண்பதன் மூலம் நீண்ட காலம் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த ஆய்வுகள் மனிதர்கள் மீது நடத்தப்படவில்லை. சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வக எலிகள் மீதான ஆய்வில், குறைவாக ...
புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைய உள்ளது.இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016ம் ஆண்டு இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இரண்டு போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவில் தயாரிக்க முடிவு ...
மதுரை: மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. முன்னதாக, மதுரை ரிங்ரோடு திடலில் கடந்த 16ம் தேதியன்று முருகனின் அறுபடை வீடுகளின் தரிசனத்திற்கான காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு, ...
தி.மு.க., அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குறிப்பிட்டுள்ளார்.”உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ்நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் ...